முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழு ஆய்வு
முல்லை பெரியாறு அணையில் பருவ மழைக்காலங்களில், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
முல்லை பெரியாறு அணையை கண்காணித்து, பராமரிக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையிலான 3 பேர் குழு, கேரள மாநிலம் வல்லக்கடவு பாதை வழியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அணையின் நீர்மட்டம் 112 அடியாக இருக்கும் நிலையில், பருவமழைக்கு வாய்ப்புள்ளதால், அணைப்பகுதிகளில்
மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
தொடர்ந்து மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளில் நீர்க்கசிவு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
Related Tags :
Next Story