ராஜஸ்தானில் கொளுத்தும் வெயில், ஆள்நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கும் சாலைகள்
ராஜஸ்தானில் கொளுத்தும் வெயில் காரணமாக சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.
இந்தியா முழுவதும் வெயில் அதிகரித்துக் காணப்படுகிறது. வடமாநிலங்களில் கடும் வெயில் காரணமாக 50 டிகிரி செல்சியஸை தொட்டுவந்தது. நேற்று உலகிலேயே அதிகமாக வெப்பநிலை பதிவான 15 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் சுருவில் அதிகப்பட்சமாக நேற்று 48.9 டிகிரி செல்சியஸை தொட்டது. இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வறட்சியால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டாலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று சுருவில் மிகவும் அதிகமாக வெயில் அடித்துள்ளது. அங்கு அதிகப்பட்சமாக வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. மதியம் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் கிடையாது. வாகனங்களும் குறைந்த அளவே சென்றது. மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் முடங்கினர். வெயிலிலிருந்து காத்துக்கொள்ள ஜூஸ் வகைகளை வாங்கி குடித்து சமாளித்தனர். பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெயில் கொடூரமான முறையில் தாக்குவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Related Tags :
Next Story