ராஜஸ்தானில் தண்ணீர் பஞ்சம்: தண்ணீர் சேமித்து வைத்துள்ள கேன்கள், டிரம்களுக்கு பூட்டு
ராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை தடுக்க தண்ணீர் சேமித்து வைத்துள்ள கேன்கள், டிரம்களுக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
போபால்,
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பில்வாரா பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வைத்துள்ள டிரம்களுக்கு பூட்டு போட்டுள்ளனர்.
இதற்கிடையில் கேனில் நிரப்பப்பட்டிருக்கும் நீரை சிலர் திருடிச்செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் கேன்களுக்கும் பூட்டு போட்டு நீரை பாதுகாத்து வருகின்றனர்.
தண்ணீர் லாரிகள் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வருவதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தங்களுக்கு தங்கம், வெள்ளியை விட தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருள் என்பதால் அதனை பத்திரமாக பூட்டி வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
தண்ணீர் பஞ்சம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், கிராமங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அந்த அந்த பகுதியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story