கே.ஆர்.எஸ். அணையில் காவிரி ஆணைய குழு ஆய்வு


கே.ஆர்.எஸ். அணையில் காவிரி ஆணைய குழு ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2019 3:00 AM IST (Updated: 5 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணையில் காவிரி ஆணைய குழு ஆய்வு நடத்தியது.

மண்டியா,

கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கண்டித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. அதேசமயம் காவிரி படுகையில் உள்ள அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதாகவும், அது குடி நீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மண்டியா மாவட்டத்தில் காவிரி படுகையில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். அணையில் உள்ள நீர் இருப்பு, நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த குழுவினர் இன்றும் (புதன்கிழமை) கே.ஆர்.எஸ். அணையில் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளிலும் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

Next Story