ரமலான் பண்டிகை; பாகிஸ்தான், வங்காளதேச வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிய இந்திய எல்லை பாதுகாப்பு படை
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
ரமலான் பண்டிகையையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தின் சிலிகுரி அருகே இந்தோ-வங்காளதேச எல்லையில் புல்பரி பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினருக்கு இனிப்புகளை பரிமாறி கொண்டனர். இதேபோன்று அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தானிய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இனிப்புகளை வழங்கி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story