பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு: 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக 2 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 2 புதிய கேபினட் கமிட்டியை அமைத்துள்ளார். அதன்படி முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி ஆகிய இரண்டு புதிய கேபினட் கமிட்டிகள் இடம் பெற்றுள்ளன.
முதலீடுகளுக்கான கேபினட் குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளனர். அதேபோல வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான கேபினட் என 10 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நியமனம், நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் ஆகிய கேபினட் கமிட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story