உத்தவ் தாக்கரே 18 எம்.பி.க்களுடன் விரைவில் அயோத்தி செல்கிறார்


உத்தவ் தாக்கரே 18 எம்.பி.க்களுடன் விரைவில் அயோத்தி செல்கிறார்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:36 PM IST (Updated: 5 Jun 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே 18 எம்.பி.க்களுடன் விரைவில் அயோத்தி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை, 

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தொடர்ந்து கூட்டணி கட்சியான பா.ஜனதாவை பற்றி வசைப்பாடி வந்தது.

இந்தநிலையில் மீண்டும் சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அதில் 18 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. ஆனாலும் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருப்பதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக 18 எம்.பி.க்களுடன் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும், அயோத்தி செல்லும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹர்‌ஷல் பிரதான் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்திக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வதாக அறிவித்துள்ளதால், ராமர் கோவில் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story