“எங்களிடையே குழப்பம் விளைவிப்பவர்களை அழித்து விடுவோம்” - மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு
எங்களிடையே குழப்பம் விளைவிப்பவர்களை அழித்து விடுவோம் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா 18 தொகுதிகளை கைப்பற்றியநிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று ரம்ஜானை முன்னிட்டு, கொல்கத்தாவில், தொழுகை நடத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக வாழ்த்து தெரிவித்தார்.
அவர்களிடையே பேசுகையில், ”எங்களிடையே குழப்பம் விளைவிப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். இதுதான் எங்கள் முழக்கம். பா.ஜனதா, அரசியலையும், மதத்தையும் கலந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கமிட்டு வருகிறது. நடுவானில் இருக்கும்போது சூரியன் சுட்டெரித்தாலும், மாலையில் தணிந்து விடும். அதுபோல், ஓட்டுப்பதிவு எந்திரங்களை கைப்பற்றி வெற்றி பெற்றவர்கள், விரைவில் ஓடி விடுவார்கள்” என்று கூறினார்.

Related Tags :
Next Story