சீன எல்லையில் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணிகள் தீவிரம் - இரவிலும் தேடுதல் வேட்டை
சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.
புதுடெல்லி,
விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட 33 நிமிடங்களில் திடீரென மாயமானது.
அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் உள்ள மலைப்பாங்கான காட்டுப்பகுதிக்கு மேலே சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை.
இந்த விமானத்தை தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இந்த தேடும் பணிகளில் இணைந்துள்ளது.
மாயமான இந்த விமானத்தை தேடும் பணிகள் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. அருணாசல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பணிகள் நடந்தன. விமானப்படையின் சி-130ஜே விமானங்கள், ஏ.என்.32 விமானங்கள் மற்றும் 2 எம்.ஐ-17 ரக விமானங்கள், 2 ஏ.எல்.எச்.ஹெலிகாப்டர்கள் பகலில் இந்த பணியில் ஈடுபட்டன.
இதைப்போல 2 சுகோய்-30 ரக விமானங்கள், 2 சி-130ஜே விமானங்கள் இரவில் தேடும் பணியை தொடர்ந்தன. எனினும் மாயமான விமானத்தை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
முன்னதாக தேடுதல் நடந்த இடங்களில் நிலவிய மோசமான வானிலை மற்றும் இருளால் நேற்று காலையில் சிறிது நேரம் தேடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வானிலை தெளிவானதும் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதற்கிடையே விமானப்படை விமானம் மாயமான விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-
ஏ.என்.32 விமானத்தில் மாயமான விமானப்படை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட சிக்னல் தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டில் இல்லாதது என அறிந்து பெரும் வருத்தமடைந்தோம்.
இந்த விமானங்களை மேம்படுத்துவதற்காக உக்ரைனுடன் கடந்த 2009-ம் ஆண்டே ஒப்பந்தம் போட்ட பின்னரும், இன்னும் அந்த விமானங்கள் மேம்படுத்தப்படாதது ஏன்? என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் விமானப்படையிடம் சிறந்த விமானங்கள் இருந்த போதும், இதுபோன்ற கடுமையான பகுதிகளில் ஏ.என்.32 ரக விமானங்களை பயன்படுத்தியது ஏன்? இதுபோன்ற விமானங்களுக்கு பதிலாக மாற்று விமானங்களை வாங்குவதற்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்காதது ஏன்?
ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்றபோது இதேபோன்ற ஒரு விமானம் மாயமான பின்னரும், இந்த விமானங்களை பயன்படுத்துவதை குறைக்க ராணுவ அமைச்சகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவ்வாறு பல்வேறு கேள்விகளை அவர் அடுக்கி உள்ளார்.

Related Tags :
Next Story