கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8-ஆம் தேதி தொடங்கும்


கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8-ஆம் தேதி தொடங்கும்
x
தினத்தந்தி 6 Jun 2019 1:51 PM IST (Updated: 6 Jun 2019 1:51 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்தமுறை சிறிது தாமதமாக 2-வது வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த மழையால் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும். 

தென்மேற்கு பருவமழை தற்போது மாலத்தீவுகள், குமரி கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மிதமாக காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Story