அதிக வெப்பம் : ராஜஸ்தான் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


அதிக வெப்பம் :  ராஜஸ்தான் மாநில மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:25 PM IST (Updated: 6 Jun 2019 4:25 PM IST)
t-max-icont-min-icon

அதிக வெப்பம் காரணமாக ராஜஸ்தான் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிகவும் வெப்பமான நகரமாக ராஜஸ்தான் மாநிலம் சுரு மாறியுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக 120 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.

ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தின் பல பகுதிகளிலும்  வெயிலின் அளவு  47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டியது.

ஜூன் 1ஆம் தேதி அன்று 124.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதிக வெயில் காரணமாக, வேலை பார்ப்பதற்கான கால அட்டவணையை பலரும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

வாழ்க்கை முறையையும் அவர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர். மதிய உணவு உண்பதை தவிர்த்து விட்டு, மோர் மட்டுமே குடிப்பதாகவும் அந்த மக்கள் கூறியுள்ளனர். 

வெளியில் செல்லும் போதெல்லாம் 10 கிலோ அளவு பனிக்கட்டியை வாங்கி வந்து ஏர்கூலர் எந்திரத்திலும், தண்ணீர் டேங்கிலும் போட்டு வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story