ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை


ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை
x
தினத்தந்தி 6 Jun 2019 6:00 PM IST (Updated: 6 Jun 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டாவில் இறங்கி, அங்கிருந்து காரில் திருப்பதிக்கு வருகிறார். சாமி தரிசனம் செய்து விட்டு அன்று மாலை 4 மணியளவில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தலின் போது திருப்பதியில் பிரசாரம் செய்ய வந்திருந்தார். அப்போது திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். 

Next Story