அசாமில் மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணியில் விமானப்படை தீவிரம்


அசாமில் மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணியில் விமானப்படை தீவிரம்
x
தினத்தந்தி 6 Jun 2019 6:22 PM IST (Updated: 6 Jun 2019 6:22 PM IST)
t-max-icont-min-icon

சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.


விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட 33 நிமிடங்களில் திடீரென மாயமானது. அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் உள்ள மலைப்பாங்கான காட்டுப்பகுதிக்கு மேலே சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 

விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இந்த விமானத்தை தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இந்த தேடும் பணிகளில் இணைந்துள்ளது.
மாயமான இந்த விமானத்தை தேடும் பணிகள் 4-வது நாளாக தொடர்கிறது. விமானப்படையும் தேடும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறது.

விமானத்தை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை ஈடுபடுத்தியுள்ளது.


Next Story