நாளை பூடான் செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்


நாளை பூடான் செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 6 Jun 2019 6:46 PM IST (Updated: 6 Jun 2019 6:46 PM IST)
t-max-icont-min-icon

2 நாள் அரசுமுறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை பூடான் செல்கிறார்.

புதுடெல்லி,

வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியதில் கடும் கண்டிப்பை காட்டிய ஜெய்சங்கர், தற்போது வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கிறார்.

இந்நிலையில் 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை பூடான் செல்கிறார். பூடான் பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கைச் சந்தித்து பேசுகிறார்.  

இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு ஜெயசங்கர் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story