குடும்ப கவுரத்தை காப்பற்ற மகளை கொலை செய்த தந்தை


குடும்ப கவுரத்தை காப்பற்ற மகளை கொலை செய்த தந்தை
x
தினத்தந்தி 6 Jun 2019 8:51 PM IST (Updated: 6 Jun 2019 8:51 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த மகளை கண்டித்தும் திருந்தாததால் மகளை தந்தை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

முசாபர்நகர்,

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் வீர்பால் இவருக்கு 22 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.  இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் வந்து தகறாறு செய்துள்ளார். மகள் குடிப்பதை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் வீர்பாலின் மகள் கால்வாயில் பிணமாக இருப்பதாக போலீசாருக்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு அர்ஜூன் சிங் என்ற காதலர் இருந்துள்ளார். காதலி சாவில் மர்மம் இருப்பதாக வீர்பாலின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். 

போலீஸ் விசாரணையில் உண்மையை வீர்பால் ஒப்புக்கொண்டார். தன் மகள் தினமும் மது அருந்து விட்டு வீட்டிற்கு வருவார் பலமுறை எடுத்துக்கூறியும் அவள் கேட்கவில்லை மகள் மது அருந்துவதால் தனக்கு அவமானமாக இருந்தாகவும், நண்பர் சிலருடன் சேர்ந்து மகளை கால்வாயில் தள்ளிவிட்டு கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

Next Story