கேரளாவில் 4 மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் - கேரளாவுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' அறிவிப்பு


கேரளாவில் 4 மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் - கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2019 12:07 AM IST (Updated: 7 Jun 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 4 மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்ட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. 

மேலும், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 10ம் தேதியன்று மிக கனமழை பெய்யும் எனவும் அதற்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' அறிவிப்பையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், தற்போது, பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story