நிதி ஆயோக் உறுப்பினரானார், அமித்ஷா மாறுதலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல்
அமித்ஷா நிதி ஆயோக் உறுப்பினர் ஆனார்.
புதுடெல்லி,
அரசின் கொள்கைகளை திட்டமிடும் அமைப்பான ‘நிதி ஆயோக்’ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி நிதி ஆயோக் துணை தலைவராக மீண்டும் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரி அல்லாத உறுப்பினர்களாக உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாலை போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், சமூகநீதி மந்திரி தாவர்சந்த் கெலாட், புள்ளியியல் மந்திரி ராவ் இந்தெர்ஜித் சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போதைய உறுப்பினர்கள் வி.கே.சரஸ்வத், ரமேஷ்சந்த், வி.கே.பால் ஆகியோர் மீண்டும் அதே பதவியில் தொடருகிறார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story