குழந்தைகள் நலனுக்காக தனது அறையில் இருந்த ஏ.சி.யை என்.ஆர். மையங்களில் பொருத்திய ஆட்சியர்


குழந்தைகள் நலனுக்காக தனது அறையில் இருந்த ஏ.சி.யை என்.ஆர். மையங்களில் பொருத்திய ஆட்சியர்
x
தினத்தந்தி 7 Jun 2019 11:53 AM IST (Updated: 7 Jun 2019 11:53 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தனது அலுவலக அறையில் இருந்த ஏ.சி. மெஷின்களை என்.ஆர். மையங்களில் பொருத்தியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஸ்வரோசிஸ் சோமவன்ஷி.  இவர் தனது அறை மற்றும் அலுவலக அறைகளில் இருந்த ஏ.சி. மெஷின்களை கழற்றும்படி கூறியுள்ளார்.

இதன்பின்பு அவற்றை மாவட்ட ஊட்டச்சத்து மறுசீரமைப்பு மையங்களுக்கு (என்.ஆர்.சி.) கொண்டு சென்று பொருத்தும்படி உத்தரவிட்டு உள்ளார்.

கோடை காலத்தினை முன்னிட்டு இங்கு சிகிச்சை பெறும் குழந்தைகள், மகளிர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு உதவியாக இருக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, இது ஒரு தன்னிச்சையான முடிவு.  இங்கு 4 ஊட்டச்சத்து மறுசீரமைப்பு மையங்கள் உள்ளன.  கட்டிடத்தின் உள்ளே கடுமையான வெப்பம் நிலவுகிறது.  இதனால் ஏ.சி. மெஷின்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

எனினும் இந்த மையங்களில் குழந்தைகள் உள்ளனர்.  அதனால் உடனடியாக அனைத்து மையங்களிலும் ஏ.சி. மெஷின்களை பொருத்தும் அவசியம் ஏற்பட்டது.  4 மையங்களிலும் ஏ.சி. மெஷின்கள் பொருத்தப்பட்டு விட்டன என அவர் கூறியுள்ளார்.

Next Story