2 வயது குழந்தை கொலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க உ.பி. அரசு திட்டம்
உத்தரபிரதேசத்தில் 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க பா.ஜனதா அரசு திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.
அலிகார்க் மாவட்டத்தில் 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
கடந்த மே மாதம் 31-ம் தேதி குழந்தை மாயமானதும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தை முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உத்தரபிரதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகள் ஜாகித் மற்றும் அஸ்லாம் என தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் ஜாகித்திடம் பணம் வாங்கியுள்ளனர். அதனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இந்த கடத்தல் கொலை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story