மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2019 9:58 PM IST (Updated: 7 Jun 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பை டெல்லி போலீஸ் அதிகரித்துள்ளது.


புதுடெல்லி, 

 
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். முக்கிய பொறுப்பை வகிக்கும் அமித்ஷாவின் பாதுகாப்பு குறித்து டெல்லி போலீஸ் ஆய்வு மேர்கொண்டது. இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள அமித் ஷா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை டெல்லி போலீஸ் அனுப்பி வைத்துள்ளது.

அமித் ஷா, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. துணை ராணுவப்படையினர் இந்த பாதுகாப்பை அளித்து வருகிறார்கள். அவருக்கு தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்போதைய வீட்டில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீட்டுக்கு அமித் ஷா மாற உள்ளார். இதற்கிடையே, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில், இந்த பாதுகாப்பு பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.

Next Story