கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது பிரதமர் மோடி


கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது பிரதமர் மோடி
x
தினத்தந்தி 8 Jun 2019 1:19 PM IST (Updated: 8 Jun 2019 1:19 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

குருவாயூர்

குருவாயூர் கோயிலில் வழிபாட்டை முடித்த பின்னர், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ண மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறியதாவது;-

மக்களின் தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது.

இந்திய அரசு உங்களுடனும்,  கேரள அரசுடனும் உறுதியாக நிற்கும்  என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நிபா வைரஸ் பாதுகாப்பிற்கான அனைத்து வசதிகளையும் வழங்குவதில் மத்திய அரசு ஒத்துழைக்கும்.

மக்கள் தங்கள் ஜனபிரதிநிதியை  5 வருடங்களுக்கு தேர்வு செய்கிறார்கள், நாங்கள்  மக்கள் சேவை செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.  பிஜேபி தொண்டர்கள்  தேர்தல் அரசியலுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்கும் ஆண்டுக்கு  365 நாட்கள் சேவை செய்கிறார்கள். ஒரு அரசை உருவாக்க மட்டுமே அரசியலுக்கு  வரவில்லை. நாட்டை கட்டியெழுப்ப நாம் இங்கே இருக்கிறோம், உலகில் இந்தியா தனது சரியான இடத்தை பெறுவதைப் பார்ப்பதற்கு நாம் தவம் கிடக்கிறோம். 

இந்த முறை மத்திய  அரசு, கிராமப்புற மற்றும் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்த மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு தனியான அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் நாடு முழுவதும்  விலங்குகளுக்கு ஒரு தடுப்பூசி  இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். கால் மற்றும் வாய் நோய் அகற்றப்பட வேண்டும்  என பல வருடங்கள் காத்திருக்கின்றன என கூறினார்.

Next Story