திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
மாலத்தீவு, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி திருப்பதி வந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி , முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதனைதொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு திருப்பதியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடன் இருந்தார். சாமி தரிசனம் செய்த பின்னர் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரதமர் மோடிக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடியை வருகையையொட்டி திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Related Tags :
Next Story