சில்சார் - திருவனந்தபுரம் விரைவு ரெயிலின் 3 பெட்டிகளில் திடீர் தீ விபத்து
அசாம் மாநிலத்தில் சில்சார் ரெயில் நிலையத்தில் சில்சார் - திருவனந்தபுரம் விரைவு ரயிலின் 3 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து சில்சார்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் 2-வது அதிவிரைவு ரெயில் ஆகும்.
இந்த ரெயிலில் இன்று பயணிகள் ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென 3 பெட்டிகளில் தீ பிடித்து மள மளவென எரியத்தொடங்கியது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சக பயணிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தீ வேகமாக பரவியதால் தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விசாரணையில் பேண்ட்ரியிலிருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story