தேசிய செய்திகள்

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் காலமானார்; முதல் அமைச்சர் அஞ்சலி + "||" + Puducherry former minister Janakiraman died of health problems

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் காலமானார்; முதல் அமைச்சர் அஞ்சலி

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் காலமானார்; முதல் அமைச்சர் அஞ்சலி
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார்.
புதுச்சேரி,

புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 78.

புதுச்சேரியின் வில்லியனூர் நகரில் பிறந்த அவர் இதன்பின் தி.மு.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.  கடந்த 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்துள்ளார்.  கடந்த 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்ற அவர் 5 முறை இதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

தி.மு.க.வை சேர்ந்த இவர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.  அவரது மறைவை அடுத்து புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தனது அஞ்சலியை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார்
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார்.
2. முன்னாள் காளஹண்டி அரசர் காலமானார்
முன்னாள் காளஹண்டி அரசர் உதித் பிரதாப் தியோ உடல்நல குறைவால் காலமானார்.
3. நீதிபதிக்கு உடல்நல குறைவு: அயோத்தி வழக்கு விசாரணை நடக்கவில்லை
நீதிபதியின் உடல்நல குறைவு காரணமாக அயோத்தி வழக்கு விசாரணை நேற்று நடைபெறவில்லை.
4. புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
5. புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் மறைவு; முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் மறைவை அடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.