புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் மறைவு; முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் மறைவை அடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி,
புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் (வயது 78) உடல் நல குறைவால் காலமானார். புதுச்சேரியின் வில்லியனூர் நகரில் பிறந்த அவர், தி.மு.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்ற அவர் 5 முறை இதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
தி.மு.க.வை சேர்ந்த இவர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அவரது உடலுக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவையொட்டி புதுச்சேரியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story