பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று நடக்க உள்ளது.
புதுடெல்லி,
மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அடுத்த 5 ஆண்டுகளுக்கான மத்திய அரசின் திட்ட நடவடிக்கைகள் பற்றி மந்திரிகளுக்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இணை மந்திரிகள் கேபினட் மந்திரிகளிடம் தங்களின் பணிகள் மற்றும் தேவையான பொறுப்புகளை கேட்டுப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என தெரிகிறது.
அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் மத்திய மந்திரிகள் கூட்டம் தவிர மந்திரிசபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. முந்தைய அரசிலும் பிரதமர் மோடி வழக்கமாக மத்திய மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story