அரியானாவில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது
அரியானாவில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குர்காவன்,
அரியானாவின் குர்காவன் பகுதியில் எமரால்டு எஸ்டேட் பகுதியில் 8 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசி எறிந்துள்ளார். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சைப் அசார் அப்துல் உசைன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் வெளிநாடுகளில் இருந்து குர்காவன் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் நடந்த விசாரணையில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story