பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மோடி மீண்டும் பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழு தலைவராக மோடியும், தேசிய தலைவராக அமித்ஷாவும் தொடர்கிறார்கள். மக்களவை துணை தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை தலைவராக தாவர்சந்த் கெலாட்டும், மாநிலங்களவை துணை தலைவராக பியூஷ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு கொறடாவாக பிரகலாத் ஜோஷி, அரசு துணை கொறடாவாக மக்களவைக்கு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவைக்கு முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story