உ.பி.யில் பயங்கரம்: இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகரில் இரண்டு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்காக 2 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை கடும் நடவடிக்கையை எடுக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதற்கிடையே பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை முசாப்பர்நகரில் சிறுமிகளான இரு சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். காசர்வா கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்க்கும் தாயாரை பார்க்க 13, 15 வயதுடைய இரு சிறுமிகள் சென்றுள்ளனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூரத்தை நடத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகிறது. மாநிலத்தில் சிறுமிகள் மீதான தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கிராமபுறங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தும்படி போலீசுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story