காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் 25-ந் தேதி கூடுகிறது
காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் 25-ந் தேதி கூடுகிறது.கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் 28-ந் தேதி கூடியது. அப்போது 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகம் தனது அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், குடிநீருக்கே திண்டாடுகிறோம் என்றும் கர்நாடக அமைச்சர்கள் மாறி மாறி பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் தொடக்கத்தில் 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில் 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடாதது குறித்து ஆலோசிக்க ஜூன் 25-ல் காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story