ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 107 பேரின் உயிரை காத்த தெலுங்கானா நபர்
ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 107 பேரின் உயிரை தெலுங்கானா நபர் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.
தெலுங்கானாவில் வசித்து வருபவர் சிவா. 12 வயது இருக்கும்பொழுது இவரது சகோதரர் மகேந்திரா என்பவர் ஆஸ்மன்பேட் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்து உள்ளார். சிவாவுக்கு சகோதரரை தவிர சொல்லி கொள்வதற்கு குடும்பம் என்று எதுவும் இல்லை.
சகோதரர் உயிரிழந்த பின் அவரது உடலை மீட்க ஏரிக்கு சிவா சென்றுள்ளார். அதன்பின்பு அவர் டேங்க் பண்ட் ஏரி அருகிலேயே வசிக்க தொடங்கி விட்டார். இதுவரை ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற 107 பேரை மீட்டு அவர்களை காப்பாற்றி உள்ளார்.
அநாதை இல்லத்தில் வளர்ந்து வந்த இவரது சமூக பணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இறந்த உடல்களை ஏரியில் இருந்து போலீசார் மீட்பதற்கும் இவர் உதவியாக இருந்து வருகிறார். இதுபற்றி துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வ பிரசாத் கூறும்பொழுது, ஏரியில் இருந்து உடல்களை மீட்பதில் சிவா எப்பொழுதும் எங்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
இந்த பணியில் அவரை தவிர எங்களுக்கு உதவ ஒருவரும் முன்வரவில்லை. தெலுங்கானா சமூகநல கல்வி நிறுவனத்தின் இயக்குனருக்கு சிவாவின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அனுமதிக்கும்படி கடிதம் எழுதியுள்ளேன். அவருக்கு எந்த வகையிலாவது உதவும் வகையில் ஐதராபாத் ஆட்சியரை அணுக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story