மணிப்பூர் மாநிலத்தில் கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது


மணிப்பூர் மாநிலத்தில் கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது
x
தினத்தந்தி 14 Jun 2019 3:35 AM IST (Updated: 14 Jun 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் 2017–ம் ஆண்டு காங்லெய்பாக் கம்யூனிஸ்டு கட்சி (கே.சி.பி.) என்ற மக்கள் போர் குழுவின் தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இம்பால், 

பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இம்பால், லாம்லை பகுதியில் ஒரு இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அசாம் ரைபிள் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது ஒரு இடத்தில் 180 குண்டுகளுடன் ஏ.கே.56 எந்திர துப்பாக்கி, 4 குண்டுகளுடன் 2 கைத்துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள், உருவத்தை மறைக்கும் நிறத்திலான 5 ஜோடி சீருடைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவை கே.சி.பி. இயக்க தலைவர் மொய்ராங்தெம் ராணா மெய்டெய் என்பவரின் கூட்டாளிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர்.


Next Story