இ.எஸ்.ஐ. பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு : வருகிற 1-ந் தேதி முதல் அமல்


இ.எஸ்.ஐ. பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு :  வருகிற 1-ந் தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:09 AM IST (Updated: 14 Jun 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ. பங்களிப்பு செலுத்தி வந்தனர். 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூ.21 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டனர்.

புதுடெல்லி, 

மத்திய அரசு அதிரடியாக இ.எஸ்.ஐ. பங்களிப்பை 6.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக இப்போது குறைத்துள்ளது. அதன்படி வேலை வழங்குபவர்களின் பங்களிப்பு 4.75 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாகவும், தொழிலாளர்களின் பங்களிப்பு 1.75 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

 இதன்மூலம் 3.6 கோடி தொழிலாளர்களும், 12.05 லட்சம் வேலை வழங்குவோரும் பலன் அடைவார்கள். இந்த அறிவிப்பு அடுத்த மாதம் 1–ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story