ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இம்ரான்கானை சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்த பிரதமர் மோடி


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இம்ரான்கானை சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Jun 2019 6:07 AM GMT (Updated: 14 Jun 2019 6:07 AM GMT)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இம்ரான்கானுடன் பிரதமர் மோடி பரஸ்பரம் நலம் விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஷேக்

கிர்கிஸ்தானில்  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த  மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பு  நாடுகளாக உள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் நேற்று இரவு விருந்து வைத்தார். இந்த விருந்தின்போது,  தலைவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.  அப்போது இம்ரான் கானிடம் பிரதமர் மோடி பரஸ்பரம் நலம் விசாரிக்கவில்லை என ஏ.என்.ஐ செய்தி நிறுவன தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார்.  மாநாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்தார். பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மூன்று இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான், ஆதரிப்பதால் தான் பிரதமர் மோடி இம்ரான்கானை சந்திக்காமல் தவிர்த்தார் என கூறப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார் என தெரிகிறது.

Next Story