தேசிய செய்திகள்

17-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் -இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு + "||" + 'total medical bandh to protest against the assault on doctor of NRS Medical College, Kolkata.'

17-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் -இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

17-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் -இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு
வரும் 17-ம் தேதி அரசு, தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா,

இந்திய மருத்துவர் சங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரும் 17-ம் தேதி அரசு, தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

அத்தியாவசிய சேவைப்பணியில் இல்லாத மருத்துவர்கள் நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். வரும் 15, 16-ம் தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா, அமைதிப்பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

போராட்டம் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப்பிரிவு தொடர்ந்து இயங்கும். திங்கள் கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் திங்கள்கிழமை வரை தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், 

மருத்துவர்களின் போராட்டத்திற்கு மேற்குவங்க அரசு தீர்வு காண வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மருத்துவர்கள் போராட்டம் குறித்து 7 நாளில் பதிலளிக்க மே.வங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.