மருத்துவர்கள் போராட்டம்: மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் அழைப்பு
மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை (17-ம் தேதி) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மம்தா தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story