குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி


குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2019 1:40 PM IST (Updated: 15 Jun 2019 1:40 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 7 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓட்டலின் உரிமையாளர் தலைமறைவானார்.

Next Story