நீர்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு; மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை
நீர்வளத்துறை அமைச்சரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அப்போது மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.
புதுடெல்லி
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்தார். சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை வைத்து உள்ளார்.
இந்த நிலையில், தமிழக் முதல்-அமைச்சர் எட்டப்பாடி பழனிசாமி நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும் காவிரியில் கர்நாடகா தண்ணீரை திறந்து விடவும் கோரிக்கை வைத்தார்.
முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரிய அறிக்கையை பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி சமர்ப்பித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story