தமிழக அரசின் ஒப்புதலை பெற அவசியம் இல்லாமல், மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் -குமாரசாமி
தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்தார். சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை வைத்தார்.
மேகதாது அணைக்கு தமிழக அரசின் ஒப்புதலை பெறுமாறு மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எந்த விதமான விதிமுறைகளோ, சட்டமோ இல்லை. தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என குமாரசாமியின் கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எட்டப்பாடி பழனிசாமி நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என கோரிக்கை வைத்து உள்ளார். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Related Tags :
Next Story