அயோத்தியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
அயோத்தியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லக்னோ,
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார். இதேபோல உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார். மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அயோத்தியில் பேருந்து, ரெயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், லாட்ஜிகள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் ஊடுவி அங்குள்ள அம்பேத்கர் நகர், ஃபைஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story