ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் -பிரதமர் மோடி


ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Jun 2019 4:46 PM IST (Updated: 15 Jun 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர்.

நடைபெற்றுவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- 

மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவை 2024-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதற்கான இலக்கு சவாலானது, ஆனால் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அடையக் கூடியது தான். 2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜலசக்தி துறை அமைச்சகம் தண்ணீர் விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும் என கூறினார்.

Next Story