பீகாரில் அனல் காற்றுக்கு 45 பேர் உயிரிழப்பு, 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி


பீகாரில் அனல் காற்றுக்கு 45 பேர் உயிரிழப்பு, 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 16 Jun 2019 2:48 PM IST (Updated: 16 Jun 2019 2:48 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் அனல் காற்றுக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மக்கள் வெளியே வரமுடியாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தில் அனல் காற்று காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவுரங்காபாத், கயா, நாவாடா ஆகிய மாவட்டங்களிலே அதிகமான உயிரிழப்பு நேரிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் பாட்னா மற்றும் மேல் சொல்லப்பட்டுள்ள மாவட்டங்களில்  அதிகப்பட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இங்கு 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story