மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை
மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை தந்தையொருவர் கத்தியால் குத்திய சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரில் திருமணம் செய்து கொள்ள மறுத்து மேலும் படிக்க விரும்பிய 15 வயது சிறுமியை பெற்ற தந்தையே கத்தியால் குத்திய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
என்னுடைய தந்தை ஆள்நடமாட்டம் இல்லாத கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்றார். என்னுடைய சகோதரனும் உடன் வந்தார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வலியுறுத்தினார். நான் மேற்கொண்டு படிக்க விரும்புவதாக தெரிவித்தேன். அப்போது என்னுடைய சகோதரன் என்னை பிடித்துக்கொண்டான். என்னுடைய தந்தை என்னை அடித்தார். கத்தியால் குத்திவிட்டார். என்னை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். என்னை கால்வாய்க்குள் தள்ளிவிட்டார். எப்படியோ நீந்தி உயிர் பிழைத்துவிட்டேன் எனக் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி.
இதுதொடர்பாக போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை பெற்று விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது சிறுமியின் உறவினர் பேசுகையில், திருமணத்திற்கு வலியுறுத்தியதால் எங்களுடைய வீட்டில்தான் சிறுமி தங்கியிருந்தார் என கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story