மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரின் மகன் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு
கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேறி மீது பாலியல் பலாத்கார மற்றும் ஏமாற்றுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரை சேர்ந்த 33 வயது பார் டான்சர், பினோய் கொடியேறி மீது பாலியல் பலாத்கார புகாரை கொடுத்துள்ளார். துபாயில் பார் டான்சராக இருந்த போது பினோய் உடன் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி என்னை பார்க்க பாருக்கு வருவார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். மும்பைக்கு வந்து இருவரும் வாழ்ந்தோம். அவரால் எனக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டுதான் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது எனக்கு தெரியும் என கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாலியல் பலாத்காரம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துபாயை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெஏஏஎஸ் சுற்றுலா நிறுவனம், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் ரூ. 13 கோடியை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டியது. இவ்விவகாரத்தில் துபாய் நீதிமன்றம் பினோய் கொடியேறிக்கு பயணத்தடையை விதித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள பினோய் கொடியேறி, பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது. ஏற்கனவே கண்ணனூர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளேன், மும்பை போலீஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை. விசாரணையை சந்திக்க தயார் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story