தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர், பயங்கரவாதி சுட்டுக் கொலை + "||" + Jaish operative, owner of car used in Pulwama attack killed in Anantnag encounter

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர், பயங்கரவாதி சுட்டுக் கொலை

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர், பயங்கரவாதி சுட்டுக் கொலை
புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான பயங்கரவாதி சஜ்ஜத் பட் சுட்டுக் கொல்லப்பட்டான்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரின் உரிமையாளர் சஜ்ஜத் பட் என்பது தெரியவந்தது. விசாரணையில் இவரும் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது. 

நேற்று ஆனந்த்நாக்கில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் சஜ்ஜத் பட் என்பது தெரியவந்துள்ளது. என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் நிறைந்த கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ வாகனத்தை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 வீரர்கள் காயம்
ராணுவ வாகனத்தை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
2. பாலகோட் தாக்குதல்: சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற பாகிஸ்தான்
பாலகோட் தாக்குதல் நடைபெற்று 43 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை பாகிஸ்தான் அழைத்து சென்று உள்ளது.
3. காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: லஸ்கர் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், லஸ்கர் இ தொய்பா தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
4. ஜம்மு காஷ்மீர்: புல்வாமா அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.