மற்ற எம்.பி.க்களை விட வித்தியாசமாக பதவி ஏற்றுக்கொண்ட நடிகை ஹேமமாலினி!
நாடாளுமன்றத்தில் மற்ற எம்.பி.க்களை விட நடிகை ஹேமமாலினி வித்தியாசமாக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் இன்று (ஜூன் 17 ) ஒவ்வொருவரும் ஒரு விதமாய் கோஷம் எழுப்பியபடி பதவி ஏற்றுக்கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு" என பதவி ஏற்பின்போது முழக்கமிட்டபடி பதவி ஏற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற போது விதவிதமாய் முழங்கிய நிலையில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி தனி வழியில் முழங்கியது மற்ற எம்.பிக்களை விட வித்தியாசப்பட வைத்தது.
Related Tags :
Next Story