பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 109 குழந்தைகள் பலி; முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு
பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு 109 குழந்தைகள் பலியான விவகாரத்தில் முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்நகரில் கடந்த ஜனவரியில் இருந்து மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 43 ஆக உயர்ந்தது.
நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று வரை பலி எண்ணிக்கை 104 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், பீகாரின் முசாபர்பூர் நகரில் 109 குழந்தைகள் மூளை காய்ச்சல் நோய்க்கு பலியாகி உள்ளனர்.
இதனை அடுத்து முதல் மந்திரி நிதீஷ் குமார் மீது பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ச வர்தன், பீகார் சுகாதார துறை மந்திரி மங்கள் பாண்டே, மத்திய சுகாதார துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு வருகிற 26ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story