17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வானார்
17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வானார். பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார்.
புதுடெல்லி,
ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். ஓம் பிர்லாவை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார். திமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டதால் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வானார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு முன்மொழிந்தார்
பிரதமர் மோடி, மக்களவை காங். தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவை அமர வைத்தனர்.
பின்னர் பிரதமர் மோடி சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசும்போது கூறியதாவது:-
ராஜஸ்தான் மக்களுக்காக அயராது பாடுபட்டவர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லா. கோடா நகர மக்களுடன் நெருக்கமாக பணியாற்றிய ஓம் பிர்லா மக்களவையிலும் பாலமாக இருப்பார். ஒருநாள் கூட ஓய்வின்றி மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம் பிர்லா. அடித்தட்டு மக்களிடம் எப்போதும் நெருக்கமாக இருப்பவர் ஓம் பிர்லா. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாலமாக இருப்பார் ஓம் பிர்லா என கூறினார்.
Related Tags :
Next Story