புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி! அதிமுகவின் எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு


புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி! அதிமுகவின் எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு
x
தினத்தந்தி 19 Jun 2019 2:03 PM IST (Updated: 19 Jun 2019 2:03 PM IST)
t-max-icont-min-icon

ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தேனி பாராளுமன்ற உறுப்பினராக நான் வருவதற்கு காரணமாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி! என புதிய சபாநாயகரை வரவேற்கும் உரையின் மீது அதிமுகவின் எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பேசினார்.

17-வது மக்களவையின் சபாநாயகராக  ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். ஓம் பிர்லாவை, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார். 

அப்போது அவர் பேசும்போது, 

"தேனி பாராளுமன்ற உறுப்பினராக நான் வருவதற்கு காரணமாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செய்து தருவார் என நம்புகிறோம்" என்று கூறினார்.

Next Story