தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்மேற்கு பருவ மழை காலம் கடந்து தொடங்கியது. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை இதற்கு வாயு புயலே காரணம் என கூறப்பட்டது. கேரளாவின் லட்சத்தீவு அருகே உருவான வாயு புயல் குஜராத் கடல் பகுதி நோக்கி நகர்ந்தது.
இதனால் தென்மேற்கு பருவமழை குறைந்து போனதோடு வடகேரளம், தெற்கு கர்நாடகா பகுதிகளில் மழையும் நின்றது.
முன்னதாக கடந்த 2007-ஆம் ஆண்டு இதேப்போல் தென்மேற்கு பருவமழை தாமதமானது குறிப்பிடத்தக்கது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-
இந்தியாவில் தாமதமாகி வரும் தென்மேற்கு பருவமழை 2 அல்லது 3 நாட்களில் கொங்கன் கடற்கரையில் பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் வருகிற 25-ஆம் தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தீவிரமாகும். மற்ற பகுதிகளில் அடுத்த 15 நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
வழக்கமாக இதுபோன்ற காலக்கட்டத்தில் 43 சதவீத அளவிற்கு மழை பெய்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு 38 சதவீத அளவுக்கே மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை தெற்கு கர்நாடகா, கோவா, ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய பகுதிகளில் பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 25-ஆம் தேதிக்கு பின்னர் தென் இந்தியா, மராட்டியம் மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழை பெய்யும். ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாத முதல் வாரம் வரை மத்திய இந்தியா முழுமையும் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story